'நீட்' தேர்வுக்கு எதிராக ஜெயலலிதா நினைவிடத்தில் மாணவர்கள் போராட்டம் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கோரி ஜெயலலிதா நினைவிடத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். செப்டம்பர் 06, 2017, 02:43 PM சென்னை, அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வு முறையால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் மாணவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் கட்சிகளை தொடர்ந்து கடந்த 4ந் தேதி முதல் பள்ளி-கல்லூரி மாண வர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.மாணவி அனிதா தற் கொலைக்கு நீதி கேட்டும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம், மறியல், மனித சங்கிலி, பேரணி ஆகிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 3-வது நாளாக மாணவர்கள் போராட்டம் நீடித்து வருகிறது. சென்னை ராயப் பேட்டை புதுக்கல்லூரி மாணவர்கள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்துவதற்காக கல்லூரியில் இருந்து சாலைக்கு வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாணவர்கள் வெளியே வரமுடியாத